பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியா உறுதி: காட்டி கொடுத்த டுவீட்

  • IndiaGlitz, [Saturday,August 12 2017]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா மற்றும் ஜூலியின் வெளியேற்றத்திற்கு பின்னர் வரவேற்பை இழந்த நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த பிரபல தொலைக்காட்சி நடிகை ப்ரியா பவானி சங்கர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என்று வெளிவந்த தகவலை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் ப்ரியா பவானி சங்கர் தனது டுவிட்டரில், 'இப்போதைக்கு டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன். உங்களது அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. மீண்டும் ஒரு பிரபல மீடியா மூலம் உங்களோடு தொடர்பில் இருப்பேன்' என்று பதிவு செய்துள்ளார்.

எனவே இந்த டுவீட் மூலம் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓவியாவுக்கு மாற்றாக அவர் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி நடிகை, தொகுப்பாளர் என தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ப்ரியா செல்வது பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓரளவுக்கேனும் தூக்கி நிறுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கௌதமிக்கு மத்திய அரசின் மதிப்பு மிகுந்த பதவி

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்தும் கடிதம் மூலமூம் அவ்வப்போது தொடர்பு கொண்டு பல கோரிக்கைகளை வலியுறுத்தியவர் நடிகை கெளதமி என்பது தெரிந்ததே....

ஜெய்-அஞ்சலியின் 'பலூன்' பறக்கப் போகும் தேதி அறிவிப்பு

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா போன்று கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி என்று கூறப்ப்படும் ஜெய்-அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படம் ரிலீசுக்கு ஏற்கனவே தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஓவியாவின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு பின் உள்ள ரகசியம்

பிக்பாஸ் நாயகி ஓவியா, மன அழுத்தம் காரணமாக அந்த வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் முழு ஓய்வு எடுத்து வருகிறார்...

புரூஸ்லீ வாழ்க்கை வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

உலக அளவில் பிரபலமான தற்காப்பு கலைஞர் மற்றும் நடிகரான புரூஸ்லீ வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

நதிகளை மீட்க நடிகை ராதிகாவின் வேண்டுகோள்

குளம், குட்டை, கண்மாய், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்கள் அனைத்தும் கட்டிடங்களாக மாறிவிட்ட நிலையில் தற்போது இருக்கும் ஒரே நீர் ஆதாரம் நதி ஒன்றே. ஆனால் அந்த நதியிலும் மணல்களை கொள்ளையடித்தும், ஆக்கிரமிப்புகள் செய்தும் அழிக்கப்பட்டு வருகிறது...