'மாஸ்டர்' பாடலை முத்தம் கொடுத்து கொண்டாடிய அட்லி மனைவி!

  • IndiaGlitz, [Friday,February 14 2020]

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் சற்றுமுன் வெளியானது. அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடிய இந்த பாடல் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. மேலும் விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் இந்த பாடலை பாடல் குறித்து தங்களது பாராட்டுகளை படக்குழுவினர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லியின் மனைவி பிரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

அட்லீக்கு பிரியா முத்தம் கொடுப்பது போல் இந்த புகைப்படத்தில் அவர் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை பதிவுசெய்துள்ளார். Life is very short nanbaaaaa, always be happyyyyyyyy என்ற வரிகளை பதிவு செய்து பிரியா தனது காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பிரியாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது