'லிப்கிஸ்' மிஸ் ஆனதால் ஏமாற்றம் அடைந்த பிரியா வாரியர்

  • IndiaGlitz, [Tuesday,July 23 2019]

மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்த 'ஒரு ஆதார் லவ்' என்ற படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த ஒரே ஒரு கண்ணசைவு காட்சி நாடு முழுவதும் வைரலானது. இதனையடுத்து சில நாட்கள் பிரியாவாரியர் நாட்டின் முன்னணி ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றார்.

இந்த நிலையில் தற்போது பிரியாவாரியர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரும் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்தும் அருகருகே உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் சினு சித்தார்த் பிரியாவாரியரின் உதட்டில் முத்தம் கொடுப்பதுபோல் வந்து பின்னர் திடீரென தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்கின்றார். இதனால் பிரியாவாரியர் ஏமாற்றம் அடைவது போல் அந்த வீடியோ முடிந்துள்ளது. இந்த வீடியோவில் பிரியாவாரியர், 'Tb to this ithenthinte kunjade?' என்ற கமெண்ட்டையும் பதிவு செய்துள்ளார்.

பிரியாவாரியர் நடித்த 'ஒரு ஆதார் லவ்' மற்றும் அவர் தற்போது நடித்து வரும் 'ஸ்ரீதேவி பங்களா' ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராக சினு சித்தார்த் பணிபுரிந்தவர் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

விமல் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்!

விமல் நடித்த 'களவாணி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் தற்போது 'சண்டக்காரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'மை பாஸ்

விஜய் நடிக்கவிருந்த படத்தில் அறிமுக ஹீரோவா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும், விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

அஜித், விக்ரம், சூர்யா பட நடிகைக்கு 6 மாதம் ஜெயில்: நீதிமன்றம் உத்தரவு

அஜித் நடித்த அசல், சூர்யா நடித்த அயன், விக்ரம் நடித்த தூள், ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர் நடிகை கொய்னா மித்ரா. இவர் மாடல் அழகி பூனம் செதி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளதாகவும், க

சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர்

நடிகர் சூர்யா சமீபத்தில் கூறிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருவதை பார்த்து வருகிறோம்.

நிலாவுல தண்ணி இருந்தா எங்களுக்கு கொடுங்க: இஸ்ரோவுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ நேற்று அனுப்பிய சந்திராயன் 2, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய விண்வெளித்துறையின் மைல்கல்