விவாகரத்தான கணவருடன் மீண்டும் இணைந்த நடிகை லிசி? வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,February 04 2023]

பிரபல இயக்குனர் பிரியதர்ஷனை நடிகை லிசி விவாகரத்து செய்த நிலையில் தற்போது தனது மகனின் திருமணத்தின்போது மீண்டும் இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

தமிழ் மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன் என்பதும் இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு நடிகை லிசியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு சித்தார்த் என்ற மகனும் கல்யாணி என்ற மகளும் உள்ளனர். தமிழ், தெலுங்கு ,மலையாள திரை உலகில் நடிகையாக கல்யாணி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் மற்றும் லிசி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனை அடுத்து 26 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் பிரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகன் சித்தார்த் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் போது பிரியதர்ஷன் மற்றும் லிஸி ஆகிய இருவருமே மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மணமக்களுடன் பிரியதர்சன், லிசி ஆகிய இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வருகிறது.

More News

'ஏகே 62' படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த விக்னேஷ் சிவன்.. அடுத்த படம் என்ன தெரியுமா?

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் 'ஏகே 62' என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன்.. மூவரும் சேர்ந்தாலும் ரஜினியை வெல்ல முடியாது: 'பதான்' இயக்குனர்

ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரும் சேர்ந்தாலும் ரஜினியை வெல்ல முடியாது என ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் கூறியிருப்பது

கமல் கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் பட வில்லன்..!

 கமல் கட்சியிலிருந்து விலகிய விஜய் பட வில்லன் இன்று புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

'லியோ லியோ லியோ': விஜய்க்காக அனிருத் கம்போஸ் செய்த 4வது ஆங்கில பாடல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான 'லியோ' படத்தின் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவின் பின்னணி இசையை அனிருத் பட்டையை

விஜய்யின் 67 படங்களில் 'லியோ' டைட்டிலுக்கு மட்டும் தான் இந்த சிறப்பு..!

தளபதி விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படத்திற்கு 'லியோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டைட்டில் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது