கடற்கரை தீவில் விஜய் பட நடிகை… மலரும் நினைவுகளை சொல்லும் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,March 22 2021]

பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டி பறந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா முதன் முதலில் நடிகர் விஜய் நடித்த “தமிழன்” திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்  என்பது தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் பாடகர் நிக்ஜோனாசை கரம்பிடித்த அவர் தொடர்ந்து சினிமா துறை மட்டுமல்லாது தொழில் துறையிலும் கால் பதித்து இருக்கிறார். அதோடு தான் சினிமா உலகில் கடந்து வந்த பாதை குறித்தும் சுயசரியாதையாக எழுதி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

இப்படி தொடர்ந்து தன்னை உற்சாகமாக வைத்து இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது கனவு சுற்றுப்பயணமான கரீபியன் தீவு படகு பயணத்தைக் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அந்தப் பதிவில் Bahamas எனும் கடற்கரைத் தீவில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணைத்து உள்ளார்.

முதலில தமிழ் அடுத்து இந்தி, தற்போது ஹாலிவுட் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகை பிரியங்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கும் பெயர் பட்டியலை தனது கணவர் நிக்ஜோனாசுடன் இணைந்து வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நட்சத்திரத் தம்பதிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு கரீபியன் தீவுக்கு பயணமான தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். அந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறது.