திடீரென வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் வீடியோ… நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,January 07 2022]

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் பிரியங்கா சோப்ரா திருமணத்திற்குப் பிறகு உலகப் பிரபலமாக மாறிவருகிறார். இதனால் அவருடைய ஒவ்வொரு அசைவுகளும் தற்போது மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையின்போது அவர் செய்த ஒரு செயலை நெட்டிசன்ஸ் தற்போது கொண்டாடி தீர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலக அழகியான பிரியங்கா சோப்ரா தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்“ திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் “குவாண்டிகோ“ வெப் சீரிஸில் நடித்து ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். தற்போது ஹாலிவுட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் “மேட்ரிக்ஸ் 4“ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நிக் ஜோனாஸுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது தனது வீட்டில் லட்சுமி பூஜை நடத்தியுள்ளார். அந்தப் பூஜையில் அவருடைய சமையல்காரர் சாமி உடேலுடன் இணைந்து நடிகை பிரியங்கா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்துகிறார். அவருடைய கணவர் நிக் ஜோனாஸ் பின்னால் நின்று கைத்தட்டி அதை வரவேற்கிறார். இதுகுறித்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த நவம்பரில் வெளியான இந்த வீடியோவை தற்போது பார்த்த நெட்டிசன்ஸ் சமையல்காரருக்கு மதிப்பு கொடுக்கும் பிரியங்காவை பாராட்டித் தள்ளி வருகின்றனர். மேலும் இந்தியக் கலாச்சாரத்தின் நடிகை பிரியங்கா வைத்திருக்கும் ஆர்வத்தையும் பாராட்டி வருகின்றனர்.

More News

'வலிமை' வெளியேறியதால் பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக

பரிதாபங்கள் உள்ளிட்ட 15 சேனல்கள்: ஒரே இரவில் நிகழ்ந்த சோகம்!

யூடியூபில் பிரபலமாக இருக்கும் பரிதாபங்கள் உள்ளிட்ட 15 சேனல்கள் திடீரென முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய்சேதுபதி மீதான அவதூறு வழக்கில் முக்கிய உத்தரவு!

விஜய்சேதுபதி மீது பதிவு செய்யபப்ட்ட அவதூறு வழக்கில் முக்கிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபியை பார்த்து மனைவி கூறியது என்ன தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் 12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபி குறித்து அவரது மனைவி தனது சமூக வலைத்தளத்தில் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 

விவாகரத்தான கணவர் மீது திடுக்கிடும் புகார் அளித்த இசைவாணி!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான இசைவாணி தனது விவாகரத்தான முன்னாள் கணவர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.