close
Choose your channels

'சூர்யா 40' படத்தின் நாயகியான சிவகார்த்திகேயன் பட நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, January 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது

இந்நிலையில் சூர்யாவின் 40வது படமான இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.