பெருசு, ஐ டிராப்ஸ் போட்டியா? பிக்பாஸை வச்சு செய்யும் ப்ரியங்கா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பெரும்பாலானோர் புதியவர்களாக இருந்தாலும் பிரியங்கா மற்றும் ராஜூ ஜெயமோகன் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கிய வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிரியங்கா தன்னுடைய காமெடியால் அதிகமாக ஸ்கோர்  செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பொதுவாக பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வார்கள், கலாய்த்து கொள்வார்கள் என்பதுதான் இதுவரை நான்கு சீசன்களில் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த சீசனில் பிரியங்கா, பிக்பாஸையே வச்சு செய்துள்ளார். பிக்பாஸ்க்கு ஒரு கண்தான் இருக்கிறது என்றும், இரண்டு கண் இருந்தால் நல்லா இருக்கும் என்றும் கலாய்க்கும் பிரியங்கா, பெருசு ஒழுங்காக அந்த ஒத்தை கண்ணுக்கு ஐட்ராப்ஸ் போட்டுக்கோ என்றும் கூறுகிறார். அப்போது வருண் ‘நீங்க போட்டு விட்றிங்களா? என கேட்கும்போது, ‘அதெல்லாம் பெரிசுக்கு பொண்டாட்டி இருக்கும், நான் எதுக்கு போடனும்’ என்றும் கூறி கலாயத்தார்.

மேலும் நாங்கள் எல்லாம் ஐடிராப்ஸ் போட்டுக் கொள்ளும்போது ஒரு கண்ணால் பார்த்து இன்னொரு கண்ணில் போட்டுக்கொள்வோம், உனக்கு இருக்கிறதே ஒரு கண்,  நீ எப்படி ஐடிராப்ஸ் போடுவாய் என்று பிரியங்கா கலாய்பப்தும் காமெடி உச்சகட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக்பாஸுக்கு தொண்டை கட்டிவிட்டது என்றும், அவரோட வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கிறது என்றும் இமான் அண்ணாச்சியிடம் கூறி கலாய்க்கிறார். மேலும் பிக் பாஸ் பேசுவது போன்று கரகரப்பான குரலில் பேசிக்காட்டியும் அனைவரையும் சிரிக்க வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த சீசனில் பிக்பாஸை காதலிப்பது போன்று அறந்தாங்கி நிஷா நடித்த நிலையில் இந்த சீசனில் பிக்பாஸையே ப்ரியங்கா கலாய்ப்பது பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக உள்ளது.

More News

சூர்யாவின் 'ஜெய்பீம்' சென்சார் மற்றும் ரன்னிங் தகவல்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக

தனுஷின் மாஸ் பாடல் வரிகளில் ஹன்சிகாவின் அடுத்த பட டைட்டில்!

தனுஷ் நடித்த படத்தில் இடம்பெற்ற மாஸ் பாடல் ஒன்றின் வரிகளையே ஹன்சிகா நடிக்கும் அடுத்த படத்துக்கு வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இமான் அண்ணாச்சியால் ஆரம்பித்த முதல் சண்டை: அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்கள் ஒரு சில நாட்கள் மட்டும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதும் அதன் பின் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும், அணி அணியாகப் பிரிந்து

ஷாருக்கான் மகனுக்கு பெயில் கிடைக்காதது ஏன்? மாஃபியா கும்பலுடன் தொடர்பா?

மும்பை அருகே சொகுசு கப்பலில் நடந்த போதைப்பொருள் பார்டியில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்

ஆக்ஷன் காட்சிக்காக பயிற்சி எடுத்த பிரபல நடிகர்… விபரீதத்தில் முடிந்த சம்பவம்!

தெலுங்கில் இயக்குநர் லிங்குசாமி இயக்கிவரும் புது படத்தில்  ஹீரோவாக முன்னணி நடிகர் ராம் பொத்னேனி நடித்துவருகிறார்.