பரோட்டாவிற்கு மாவு பிசையும் டான்ஸ்: புளூசட்டை மாறனின் விமர்சனத்திற்கு தயாரிப்பாளர் கண்டனம்!

அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார் .

ரஜினி, அஜீத், விஜய் உள்பட எந்த பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை மட்டும் கொடுப்பதையே ப்ளூ சட்டை மாறன் வழக்கமாக வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் ‘வலிமை’ படத்தையும் அதேபோல் நெகட்டிவ் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் அதன் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் புரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார் என்ன பதிவு செய்து இருந்தார்.

அவருடைய இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் கூட கண்டனம் தெரிவித்த நிலையில் இது குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், ‘படத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு கமெண்ட்டை அவர் பதிவு செய்திருப்பது என்னை ஏமாற்றமும் அடையச் செய்தது மட்டுமின்றி கோபமடையும் செய்துள்ளது.  இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் ஒரு நல்ல மனிதராக இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒழுக்கமான மனிதராக இருக்க வேண்டும், இதை அவர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ஆதரவு குவிந்து வருகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அவதாரமாக மாறிய தல தோனி: வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனியின் புதிய கிராபிக்ஸ் நாவல் சமீபத்தில் வெளியானது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சொகுசு படகில் சென்ற பிரபல நடிகை மர்ம மரணம்: கொலையா? விபத்தா? என விசாரணை

பிரபல நடிகை ஒருவர் சொகுசு படகில் சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தா?

மீண்டும் போனிகபூர்-எச்.வினோத் கூட்டணி: ஆனால் இம்முறை அஜித் ஹீரோ இல்லை!

போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகிய 'நேர் கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன

நயன்தாராவின் குஜராத்தி திரைப்படம் விஜய்சேதுபதி படத்தின் ரீமேக்கா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது தனது காதலருடன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல தமிழ் படங்களை தயாரித்து வரும் நிலையில் முதல்

கமல்ஹாசன் வீட்டிற்குள் மீண்டும் புகுந்த கொரோனா: இம்முறை யாருக்கு தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் சில நாட்களில் அவர் குணமாகி வீடு