நலிந்த தயாரிப்பாளர்கள் என்ற வார்த்தை அகற்றப்படும். விஷால் அணியினர்களின் வாக்குறுதிகள்

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று விஷால் அணியினர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் பேசிய விஷால் 'நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம். அதேபோல் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாங்கள் ஒருசில வாக்குறுதிகளை தருகிறோம். இந்த வாக்குறுதிகளை கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றிவிடுவோம். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்யவும் தயார்' என்று கூறினார்.

விஷால் அணியினர்களின் வாக்குறுதிகள் இதோ:

வெளியிட முடியாமல் இருக்கும் படங்களை வெளியிடவும், அனைத்து படங்களுக்கும் சாட்டிலைட் உரிமம் மூலமாக லாபம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.

அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வந்து சேர வேண்டிய கேபிள் TV வருமானத்தை சரி செய்து, மாதா மாதம் அனைத்து தயாரிப்பாளர்கள் பயன்படும் வகையில் வருமானம் ஈட்டித் தரப்படும்.

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாங்க மானியத்தை மாநில அரசுடன் நட்புறவுடன் பேசி தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய மானியத்தை பெற்றுத்தரப்படும்.

சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து பிரச்சினைகளும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்.

நலிந்த தயாரிப்பாளர்கள்' என்ற வார்த்தை தயாரிப்பாளர் சங்க வரலாற்றில் இருந்து அகற்றப்படும்.

அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வீட்டு மனை வழங்கப்படும். இதற்கான நிதி சங்க வைப்பு நிதியில் இருந்து எடுக்காமல் புதிய வருவாய் மூலமாகவே நிறை வேற்றப்படும்.

யார் எந்த அணி என்ற பாரபட்சம் இல்லாமல், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் தொகைரூ.5,000/- ல் இருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தப்படும்.

தீபாவளி பரிசு ரூ.10,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்.

பொங்கல் பரிசு ரூ.5,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்.

சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி நிறுவனர்களில் இலவச கல்வி பெற வழிவகை செய்யப்படும்.

முந்தைய நிர்வாகிகளைப்போல் சுயநல நோக்கோடும், தொலைநோக்குப் பார்வை அற்றவர்களாகவும் செயல்பட மாட்டோம்.

ஒரு வருடத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் அனைத்து நிர்வாகிகளும் . இல்லையேல் ராஜினாமா செய்துவிடுவோம்.

More News

யாக்கை, முப்பரிமாணம் சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் 'குற்றம் 23' படத்தின் வசூல் நம்பர் ஒன்னாக இருந்தது குறித்து சற்றுமுன்னர் பார்த்தோம். அந்த வகையில் தற்போது கடந்த வாரம் வெளியான கிருஷ்ணாவின் 'யாக்கை' மற்றும் சாந்தனுவின் 'முப்பரிமாணம்' படங்களின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்...

சுசித்ரா லீக் விவகாரம் குறித்து தனுஷ் சகோதரி கூறியது என்ன?

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டில் ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தில் அதிகமாக பேசப்பட்டு வருபவர் நடிகர் தனுஷூம் ஒருவர். இந்த பிரச்சனை குறித்து தனுஷ் தொடர்ந்து அமைதி காத்து வரும் நிலையில் தனுஷின் சகோதரி விமலா கீதா, பாடகி சுசித்ரĬ

மீண்டும் களை கட்டிய பாட்ஷா. புதுப்படங்களை மிஞ்சிய ஓப்பனிங் வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 40 ஆண்டுகால திரையுலக வாழ்வில் அவருடைய மிகச்சிறந்த படம் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிடும் படம் 'பாட்ஷா' என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது...

அருண்விஜய்யின் 'குற்றம் 23' சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்

ஒவ்வொரு வாரமும், அந்தந்த வார இறுதி சென்னை பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் குறித்து பார்த்து வருகிறோம்...

பஞ்சாயத்து தலைவர் கேரக்டரில் இளையதளபதி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் கதையின் ஒருபகுதி கடந்த 80களில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...