சாட்டிலைட் டிவியை அடுத்து விஷாலின் அடுத்த அதிரடி திட்டம்

  • IndiaGlitz, [Monday,May 22 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக விஷால் தலையிலான இளைஞர் படை பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி திருப்பங்கள், அறிவிப்புகள் வெளிவந்து தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சேட்டிலைட் சேனல்கள் தொடங்கப்படவுள்ளதாகவும், இனி அனைத்து திரைப்படங்களுக்கும் உரிய விலை கொடுத்து அந்த சேனல்களிலேயே படங்கள் ஒளிபரப்பாகும் என்றும் விஷால் அறிவித்ததை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை விஷால் அறிவித்துள்ளார். அதன்படி தயாரிப்பாளர் சங்கத்தின் சார்ப்பில் ஆன்லைன் புக்கிங் இணையதளம் ஒன்று தொடங்கப்படும் என்றும் அதன் மூலம் அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைனிலேயே டிக்கெட்டுக்கள் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் தற்போதுள்ள ஆன்லைன் புக்கிங் இணையதளங்கள் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.30 கூடுதல் தொகை வசூல் செய்வதாகவும், இனி அதுபோல் நடக்காது என்றும் தயாரிப்பாளரின் இணையதளம் ரூ.10 மட்டுமே வசூல் செய்யும் என்றும் இதனால் டிக்கெட் புக்கிங் செய்யும் ஆடியன்ஸ்களுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.20 மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அதிரடியால் ஆன்லைன் புக்கிங் இணையதளங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

ராதாமோகன்-அருள்நிதியின் 'பிருந்தாவனம்': திரை முன்னோட்டம்

'மொழி', 'அபியும் நானும்', 'கெளரவம்', 'உப்புக்கருவாடு' போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகனின் அடுத்த படைப்பு 'பிருந்தாவனம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் வெள்ளி அன்று வெள்ளித்திரைக்கு வருகிறது...

சமுத்திரக்கனியின் 'தொண்டன்': திரைமுன்னோட்டம்

கோலிவுட் திரையுலகில் பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துகளுடன் கூடிய திரைப்படங்கள் உருவாக்கும் ஒருசில இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர்...

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஜீவா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய அரசியல் வருகை குறித்த பேச்சுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்...

தமிழக முதல்வர் கலந்து கொண்ட முதல் ஆடியோ ரிலீஸ் விழா

தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டதோடு, அந்த படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த படம் 'வைரமகன்', படத்தின் ஹீரோ கோபிகாந்தி...

'பாகுபலி' வெற்றியை தொடர்ந்து டிரண்ட் ஆகும் சரித்திர படங்கள்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக கோலிவுட்டில் மீண்டும் சரித்திர படங்களின் டிரெண்ட் ஆரம்பித்துவிட்டதாகவே கருதப்படுகிறது...