close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு: பார்ட் 2 குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன மாஸ் தகவல்

Monday, September 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கிய ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும் முதல் நாளில் பத்து கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப் படம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களிலும் நல்ல வசூல் செய்ததாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகத்துக்கு இயக்குனர் கௌதம் மேனன் லீட் கொடுத்துள்ள நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது. ஏற்கனவே கவுதம் மேனன் பல பேட்டிகளில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து மாஸ் தகவலை தெரிவித்தார். ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கி விட்டதாகவும், ஜெயமோகன் மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் தற்போது இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் இருப்பதாகவும் ஸ்கிரிப்ட் பணி முடிவடைந்தவுடன் வேல்ஸ் பிலிம்ஸ் உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து படத்தின் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பதும் மட்டுமின்றி விரைவில் இந்த படம் தொடங்கப்படும் என்றும் கூறப்படுவதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.