close
Choose your channels

தனுஷ் பிறந்த நாளில் விளம்பரத்தில் மாஸ் காட்டிய கலைப்புலி தாணு!

Wednesday, July 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனுஷின் பிறந்தநாள் விளம்பரத்தில் மாஸ் காட்டியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு அவர்கள் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில்தான் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் ஸ்டைலிஷான போஸ்டரை தமிழின் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் முழுப்பக்க விளம்பரத்தை கலைப்புலி எஸ். தாணு அளித்து மாஸ் காட்டியுள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் தனுஷின் பிறந்தநாளுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அவர் மென்மேலும் வளர வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முதன்முதலில் விளம்பரத்தில் பிரம்மாண்டத்தை அறிமுகப்படுத்திய கலைப்புலி தாணு அவர்கள் தற்போது தனுஷின் பிறந்தநாள் விளம்பரத்திலும் பிரமாண்டத்தில் மாஸ் காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.