தயாரிப்பாளரை ஹீரோவாக்கிய மிஷ்கின் சகோதரர்!

  • IndiaGlitz, [Monday,July 06 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா கடந்த 2018 ஆம் ஆண்டு ’சவரக்கத்தி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்பின் அவர் ’கண்ணாமூச்சி’ என்ற வெப்தொடரை இயக்கிய நிலையில் தற்போது ஆதித்யா இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘பிதா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மிஸ்கின் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் மதியழகன் நாயகனாக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே அருண் விஜய்யின் ’பாக்ஸர்’படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் அனுகீர்த்தி என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் கதையானது மகளை தொலைத்துவிட்ட தந்தையின் தேடுதல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மதியழகன் மகளாக நடிக்கும் கேரக்டரின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மகளை தொலைத்த தந்தையின் தேடும் கதை தமிழில் ’மகாநதி’ உள்பட பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன நிலையில் இந்த படம் அவற்றிலிருந்து எந்த வகையில் வேறுபட்டது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

10 கிலோ குறைந்த எடை: ஸ்லிம்மாக மாறியதன் ரகசியத்தை சொல்லும் ஷெரின்

தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின்னர் 'விசில்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஷெரின்

வந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா, ஸ்வைன் ஃப்ளூவை தொடர்ந்து 24 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லக்கூடிய மற்றொரு நோய்த்தொற்று சீனாவில் பரவி வருவதாகத் தற்போது பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது.

லண்டன் To கொல்கத்தாவுக்கு பஸ்ஸில டிராவலா??? தலைச் சுற்ற வைக்கும் ஆச்சர்யத் தகவல்!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு பரபரப்பு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸின் பாதிப்பு மிகவும் குறைந்து கொண்டே வந்ததால் மிக விரைவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா மாறும்

கொரனோ தடுப்பு மருந்து: ஒரு சில மணி நேரங்களில் அறிக்கையை வாபஸ் பெற்ற அமைச்சகம் 

கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்த