தயாரிப்பாளர் ராஜேஷ் ஹீரோவாக நடிக்கும் படம்.. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல தயாரிப்பாளர் ராஜேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், சற்று முன் அந்த போஸ்டர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா நடித்த அறம், ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், அயலான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ராஜேஷ். இவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த போஸ்டர் சற்று முன் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரின் படி, இந்த படத்தின் டைட்டில் "அங்கீகாரம்" என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜே.பி. தென்பதியான் இயக்க உள்ளார். ஜிப்ரான் இசையில், விசுவநாத் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் போஸ்டரில், ராஜேஷ் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் போல இருப்பது போலவும், பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றக் காட்சிகள் உள்ளதைப் போலவும் தெரிகிறது. இதனால், இந்த படம் மீது எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.
மேலும், இந்த படத்தில் அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டியன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர், முக்கியக் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Not a rebellion.
— KJR (@KJRuniverse) May 23, 2025
A response that’s long overdue.#அங்கீகாரம் - #ANGIKAARAM - #GURTIMPU - #గుర్తింపు
A Statement by @jpthenpathiyan 🥇 #RaiseYourVoice@swastik_visions @GhibranVaibodha @viswafilmmaker @vijivenkatesh @PeterHeinOffl @SindhooriC @Sanlokesh @RangarajPandeyR… pic.twitter.com/wmBvwTFbhd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments