பூமாதேவி வாய பொளக்கப்போறா... பிரபல தயாரிப்பாளர் அதிருப்தி!

  • IndiaGlitz, [Wednesday,July 03 2019]

உலகிலேயே அதிக பரப்பளவில் காடுகளை கொண்ட பகுதி பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் தான். இங்கு பல அரிய வகை மரங்கள், மூலிகைகள் கிடைப்பது மட்டுமின்றி இந்த மரங்களால்தான் மழையும் பொழிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அரசியல், பணத்தாசை உள்ளிட்ட காரணங்களால் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு நிலப்பரப்பாக மாற்றப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மட்டும் சுமார் 60% காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாம். அதாவது ஒவ்வொரு நிமிடமும் ஒன்றரை கால்பந்து மைதானம் அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர். காடுகள் அழிப்பதை எதிர்த்து குரல் கொடுக்கப்பவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த செய்தி குறித்து கருத்து கூறிய பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, 'பூமாதேவி வாய பொளக்கப்போறா... எல்லா உள்ள போகப்போறோம்! என்று தனது சமூக வலைத்தளத்தில் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளார்.