'வணங்கான்' படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,February 20 2024]

இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்த ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தை கலக்கியது என்பதை பார்த்தோம். இந்த டீசரில் ஒரு வசனம் கூட இல்லை என்றாலும் அருண் விஜய் நடிப்பில் மிரட்டி இருந்தார் என்றும், பாலா ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருந்தார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ’வணங்கான்’ படத்தின் டீசரில் ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் ரிலீஸ் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஒரு கையில் பெரியார், இன்னொரு கையில் பிள்ளையார் என இருக்கும் இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அதற்கு பதில் அளித்த சுரேஷ் காமாட்சி ’மே மாதம் திரையில் நீங்கள் இந்த படத்தை பார்க்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’வணங்கான்’ மே மாதம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இன்னொரு திரைப்படமான ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் தேர்தலுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். எனவே ’வணங்கான்’ மற்றும் ’ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய இரண்டு படங்களுமே மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மயில்சாமியின் கடைசி படம் உள்பட 8 படங்கள் ரிலீஸ்.. இந்த வார ரிலீஸ் விவரங்கள்..!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி கடந்தாண்டு காலமான நிலையில் அவர் நடித்த கடைசி படம் உள்பட 8 திரைப்படங்கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோட்டா மீடியா தயாரிக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  

அரண்மனையை அடுத்து 3ஆம் பாகமாகும் இன்னொரு சுந்தர் சி படம்.. கவின் ஹீரோவா?

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' திரைப்படம் மூன்று பாகங்கள் ரிலீஸ் ஆகிய நிலையில் நான்காம் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்தது.

நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் திறக்கப்பட்ட தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம்.. சிவகுமார், சூர்யா பங்கேற்பு..!

பிரபல தமிழ் திரைப்பட நிறுவனத்தின் கிளை மும்பையில் திறக்கப்பட்ட நிலையில் இந்த திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர் சூர்யா கலந்து கொண்ட கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி