லொள்ளுசபா நடிகர் சிரிக்கோ உதயாவுக்கு நிதியுதவி செய்த தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இசை அமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் அவர்கள் நடிகர் சிரிக்கோ உதயா அவர்களை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் , நடிகர் மற்றும் விநியோகஸ்தர் ஜெனிஷ் மற்றும் குழுவினர் உடன் சென்றனர்.
RVR STUDIOS மற்றும் ACTION REACTION சார்பில் சிரிக்கோ உதயாவுக்கு ரூ.20,000 பொருளாதார உதவியையும் வழங்கினர். விரைவில் முழுமையான நலத்துடன் அவர் திரும்பி, திரையில் மீண்டும் தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என வாழ்த்து கூறினார்.
மேலும் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டாலும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் சுவாமிநாதன் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இவ்வளவுக்கும் இவரது தயாரிப்பில் சிரிக்கோ உதயா ஒரு படத்தில் கூட நடித்ததில்லை, இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரிக்கோ உதயா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை கேள்விப்பட்டு ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் உதவி செய்த நிலையில், அவருடன் நடித்த சில பெரிய நடிகர்களும் விரைவில் நிதியுதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com