ஒரிஜினல் ரிலீசில் கிடைத்த லாபத்தை விட 10 மடங்கு கிடைக்கும்: 'சச்சின்' ரீ ரிலீஸ் குறித்து தாணு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


வெளியான நிலையில், 25 ஆண்டுகள் கழித்து இந்த படம் விரைவில் ரீரிலீஸ் என என்று தகவல் சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இதுகுறித்து, இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய், ஜெனிலியா, வடிவேலு, பிபாஷா பாசு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஜான் இயக்கியிருந்தார். சச்சின் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் வந்தது. வெளியீட்டின்போது, இந்த படம் மிகப்பெரிய வரவேற்பும் லாபத்தையும் பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ்க்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து வரும் நிலையில், விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தாணு, "சச்சின் திரைப்படம் 2005ல் வெளியான போது, அப்போது ஐந்து வயது குழந்தைகளாகவும், பத்து வயது குழந்தைகளாகவும் இருந்தவர்கள் திரையரங்கில் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இன்று 30 வயது இருக்கும் நிலையில் அவர்கள் திரையரங்குக்கு வந்து இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். இதனால் முதல் வெளியீட்டில் கிடைத்த லாபத்தை விட 10 மடங்கு அதிகமாக கிடைக்கும்!" என்று தெரிவித்தார்.
மேலும், "இன்றைய இளைஞர்கள் திரையரங்கில் இந்த படத்தை அனுபவிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த படம் மறு வெளியீட்டில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்!" என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
சச்சின் விரைவில் திரையில்❤️ #SacheinRerelease #VaadiVaadi lyrical video from 9:10am tomorrow
— Kalaippuli S Thanu (@theVcreations) March 8, 2025
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP @geneliad #Vadivelu @iamsanthanam @bipsluvurself#ThotaTharani #VTVijayan#FEFSIVijayan #SacheinMovie@idiamondbabu @RIAZtheboss… pic.twitter.com/7JXbEJOEMW
சச்சின் விரைவில் திரையில்❤️#SacheinRerelease
— Kalaippuli S Thanu (@theVcreations) March 9, 2025
VaadiVaadi lyrical video out now
▶️https://t.co/2wtLccBzRj
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP @geneliad #Vadivelu @iamsanthanam @bipsluvurself#ThotaTharani #VTVijayan#FEFSIVijayan #SacheinMovie@idiamondbabu… pic.twitter.com/jukFih5Xlc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com