என்.ஜி.கே ரிலீஸ் குறித்து தயாரிப்பாளரின் புதிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,October 17 2018]

சூர்யா, நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. தீபாவளி கழித்து இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கலை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

'என்.ஜி.கே. படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சூர்யாவுக்காக காத்திருக்கின்றது. வரும் நவம்பரில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும். இந்த படத்தை ஒரு சிறந்த படைப்பாக உங்கள் முன் வைக்க அதிக ஆவலுடன் உள்ளோம்' என்று கூறியுள்ளார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் இந்த டுவீட்டால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

More News

தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளீயாகிவுள்ளது. இந்த படத்தின் அதிகாலை காட்சிகள் ஆரம்பித்து பாசிட்டிவ் ரிசல்ட்டுக்கள் வர தொடங்கிவிட்டதால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

'ஆண் தேவதை' கவினுக்கு வாழ்த்து கூறிய கமல்

சமீபத்தில் வெளியான இயக்குனர் தாமிராவின் 'ஆண் தேவதை' திரைப்படத்திற்கு ஊடகங்களின் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது தெரிந்ததே.

ரஜினி ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி

கடந்த சில நாட்களாக 'மீடூ' விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து ஆபாச பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் பதிவு செய்து பிரபலங்களை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.

கமல் கட்சியை வளரவிடுவது தமிழகத்துக்கு ஆபத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை தினமும் ஒரு தமிழக அமைச்சர் விமர்சனம் செய்வதும், அவர்களுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பதும்

ஆன்லைனில் பட்டாசு விற்பனை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.