விஷால் அதிரடி முடிவால் அஜித்-விஜய் படங்களுக்கு சிக்கல்?

  • IndiaGlitz, [Wednesday,May 03 2017]

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றிய நடிகர் விஷால், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின்படி தயாரிப்பாளர்களின் முன்னேற்றத்திற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகள் வைத்து, அந்த கோரிக்கைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 1 முதல் வேலைநிறுத்தம் என்றும், அதை தவிர வேறு வழியில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த நிலையில் விஷால் கொடுத்த கெடு முடிவடைய இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் அவருடைய கோரிக்கைகளை கண்டுகொண்டதாக தெரியவில்லை. எனவே ஜூன் 1 முதல் வேலைநிறுத்தம் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. வேலைநிறுத்தம் என்றால் படவேலைகள் முடக்கம், ரிலீஸ் கிடையாது, படப்பிடிப்பு கிடையாது, எடிட்டிங், டப்பிங், மிக்சிங் என எந்தப போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இருக்காது என்றே கூறப்படுகிறது.
சுமார் 20 வருடங்களுக்கு முன் இதேபோன்று நடந்த ஒரு வேலை நிறுத்தத்தால் அன்றாட பணியாளர்கள் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டனர். அதுபோன்ற ஒரு நிலைமை வந்துவிடுமோ என்று சினிமா தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித பயம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அதிக பட்ஜெட் செலவு செய்து தயாராகி வரும் அஜித்தின் 'விவேகம்', விஜய்யின் 'தளபதி 61' உள்பட பல படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் முடங்கும் என்பதால் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியுமா? என்ற சிக்கலும் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் நலனுக்காகத்தான் இந்த வேலை நிறுத்தம் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பார்களா? அல்லது ஒருசில படங்களின் பணிகள் பாதிக்கக்கூடாது என்ற காரணத்தால் வேலைநிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்பது ஜூன் 1ஆம் தேதி நெருங்கும்போதுதான் தெரியும்,

More News

விவேகம் படத்தின் வியக்க வைக்கும் வியாபாரம் ஆரம்பம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

'பாகுபலி 2' படத்தில் தமிழின விரோதி: பிரபல இசையமைப்பாளர் கருத்து

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்து வருகிறது.

கேரள பூரம் திருவிழாவில் ஆஸ்கார் நாயகனின் புதிய முயற்சி

கேரள மாநிலத்தில் நடைபெறும் 'பூரம்' திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வரிசையாக நிற்கும் யானைகள், விதவிதமக ஒலிக்கப்படும் இசை, பட்டாசுகளின் வாண வேடிக்கை ஆகியவை இந்த திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்

ஜெயலலிதா செய்தது மிகபெரிய தவறு! நாஞ்சில் சம்பத்

தினகரன் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுகவில் தினகரன் அணியை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவது தெரிந்ததே.

ஜெயலலிதா சிகிச்சை படம் விரைவில் வெளியீடு: ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் அம்மா அதிமுக

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குறிப்பாக அவரது அறையில் இருந்த சிசிடிவி அகற்றப்பட்டது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் பல்வேறு கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்...