'விஜய் 63' படம் வெளிவந்தவுடன் கால்பந்து ஃபேமஸ் ஆகும்: பேராசிரியர் கருத்து

  • IndiaGlitz, [Sunday,May 12 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் கால்பந்து வீரராகவும், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளவரும் பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான கு.ஞானசம்பந்தம் அவர்கள் 'தளபதி 63' படம் குறித்து கூறுகையில், '
விஜய் தனது 63ஆவது படத்தில் கால்பந்து வீரராக நடித்துள்ளார், அந்த படம் வந்தபிறகு கால்பந்திற்கு ஏற்றம் வரும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மோடியின் மேக்கப்புக்கு 80 லட்சமா? வெளியான உண்மை!

பிரதமர் மோடி, அவரை அழகுபடுத்திக்கொள்ள,  மேக்கப்புக்கு மட்டும் 80 லட்சம் செலவு செய்து வருவதாக, தகவல் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது...

விரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம்: எஸ்.வி.சேகர் பேட்டி

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணியில் மீண்டும் நாசர், விஷால் கார்த்தி ஆகியோர் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவியில் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.

இது பெரிய அயோக்கியத்தனம்: 'அயோக்யா' படம் குறித்து பார்த்திபன் பதிவு

நடிகர் விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது. ஜூனியர் என்.டி.ஆரின் 'டெம்பர்' ரீமேக்காக இருந்தாலும் இயக்குனர் வெங்கட்மோகன்

இந்த படம் சீனர்களுக்கும் பிடிக்கும்: 'நேர் கொண்ட பார்வை' தயாரிப்பாளர்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்பதும் இவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் என்பதும் தெரிந்ததே

தங்கமகள் கோமதியின் தாயாருக்கு நடிகை வரலட்சுமி கொடுத்த சிறப்புக்குரிய விருது

தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்தார்