செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை? அசத்தும் புது கண்டுபிடிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து உலகம் இன்னும் விடுபடாமலே இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. அதுவும் பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,064 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனையை செல்போன் வழியாகக் கண்டறியும் புது கண்டுபிடிப்பு ஒன்றை பிரான்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு சளி மாதிரிகளை செல்போனில் கணக்கிடும் ஒரு கருவியை மட்டும் இணைத்துவிட்டால் போதுமானது. இந்தக் கருவியைக் கொண்டு சளி மாதிரிகளில் கொரோனா மரபணு இருக்கிறதா என்பதை வெறும் 10 நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

CORDIAL-1 எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்தப் புதிய கண்டுபிடிப்பில் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகளை பரிசோதித்து விட முடியும் என்றும் பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் அடுத்தக் கட்டமாக இதன் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் செல்போன் வழியாக அதுவும் 10 நிமிடத்தில் கொரோனவை கண்டுகொள்ளும் புது கண்டுபிடிப்பை பார்த்து பலரும் வியப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

More News

சசிகலாவை சீமானும் சந்தித்தார்: அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதா?

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக முழு ஓய்வில் இருந்தார்.

சரத்குமாரை அடுத்து சசிகலாவை சந்தித்த பழம்பெரும் இயக்குனர்!

நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சசிகலாவை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் முன்னணி வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய முன்னணி வீரராக இருந்து வரும் உபுல் தரங்கா

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரின் அசத்தல் சாதனை!

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான ஜி.சத்யன் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

சசிகலாவுடன் பிரபல நடிகர் சந்திப்பு: தேர்தல் கூட்டணியா?

சசிகலாவை பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.