தமிழக நிதியமைச்சர் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.....!

  • IndiaGlitz, [Monday,August 09 2021]

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று மாநிலத்தில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். கடந்த 2001-இல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கை வெளிவர உள்ளது.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பு இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். தமிழகத்தில் சென்ற 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடத்தியிருந்த நிலையில், அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களுக்காக, எந்த வழிகளில் எவ்வாறு தொகைகள் செலவிடப்பட்டது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையானது 120 பக்கங்கள் கொண்டது.

வருகின்ற 13-ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறஉள்ளது. இந்நிலையில் இன்று வெளியிடவிருக்கும் வெள்ளை அறிக்கையானது, கூட்டத்தொடரில் மிகப்பெரிய விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2001- ஆம் வருடம் திமுக ஆட்சியிழந்த போது, கடன் ரூ.34,540 கோடியாக இருந்துள்ளது. இதன்பின் 2006-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி நிறைவடைகையில் கடன் ரூ.63,848 கோடியாகவும், 2011-ல் திமுக ஆட்சி நிறைவடைகையில் 1.14 லட்சம் கோடியாகவும் உயர்ந்திருந்தது. இதையடுத்து 2011 முதல் 2016-க்கு இடைப்பட்ட அதிமுக ஆட்சி காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது. கடந்த 2016 - 2021-க்கு இடைப்பட்ட அதிமுக ஆட்சி காலத்தில், 4.85 லட்சம் கோடியாக கடன் மேலும் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் நடப்பாண்டு துவக்கத்தில் அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது தமிழகத்தில் கடனளவு 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக அரசிற்கு வருவாய் குறைந்துள்ள நிலையில் எதிர்பார்த்த கடன் அளவை விட, அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 

More News

நடிகை வித்யுலேகா ராமனின் "பேச்சுலர் பார்ட்டி" போட்டோஸ்.....!

நடிகை வித்யுலேகா  ராமனின், சகோதரியான கீதாஞ்சலி செல்வராகவன் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

அசுரன் - வெந்து தணிந்தது காடு படங்களுக்குள் என்ன சம்பந்தம்? எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் 'அசுரன்' படம் போன்று கிராமத்து கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில்

விஜய்சேதுபதி அலுவலகத்தில் நடந்த அரைமணி நேர படப்பிடிப்பு: என்ன படத்திற்காக தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் அரைமணிநேரம் திரைப்பட படப்பிடிப்பு ஒன்று நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. 

'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் குறித்து செல்வராகவன் கூறிய ஆச்சரிய தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம்

நடிகருக்கு இணையா சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகை… கிடைத்த பதில் என்ன தெரியுமா?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “பத்மாவதி“,