வெளியே இப்படி பேசாத, நம்முடையது சொகுசு கார் தான்......! கிருத்திகாவிற்கு அறிவுரை கூறிய மதன்....!

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

நாம் வைத்துள்ள கார் சொகுசு கார் தான், வெளியே நீ அப்படியெல்லாம் பேசாத என்று பப்ஜி மதன், மனைவி கிருத்திகாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

யுடியூப் தளத்தில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதற்காக, கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி பப்ஜி மதன் கைது செய்யப்பட்டான். இவன் மீது குண்டார் சட்டம் பாய்ந்ததில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். குண்டார்ஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருக்கும் கலெக்ட்டர் வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் இன்று மதனை போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இங்கு மதனின் பெற்றோரும், அவரது மனைவியும் வந்திருந்தார்கள். மதன் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வாதிடுவதற்காக, மதன் ஆஜர்படுத்தப்பட்டான்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளான மாசிலாமணி, ரகுபதி, ராமன் உள்ளிட்டோர் முன் ஆஜர் படுத்தப்பட்ட மதனுக்கு ஆதரவாக, அவரது மனைவி கிருத்திகா வாதிட்டார். அவர் இணையம் மூலம் தடை செய்த விளையாட்டை விளையாடவில்லை, இங்கு சீன செயலிகளுக்கு தடை விதித்த நிலையில், அவர் பயன்படுத்தியது கொரியா வெர்ஷன் தான். அதனால் சாதாரண பிரிவுகளின் கீழே நடவடிக்கை எடுத்திருக்கலாம், குண்டார்ஸ் போடும் அளவிற்கு அவர் பெரிய தவறு செய்யவில்லை என்று மதன் மனைவி வாதிட்டதாக, அவர் தரப்பு வக்கீல் கூறினார்.

இதன்பின் மதனை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து செல்கையில், 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வளாகத்திலேயே வேனை நிறுத்தி வைத்திருந்தனர். அச்சமயத்தில் சில மீட்டர் தூர இடைவெளியில், மதனும் அவர் மனைவியும் பேசிக்கொண்டனர். அப்போது மனைவியிடம் மதன் நாம் வைத்திருப்பது சொகுசு கார் தான், வெளியில் யாரிடமும் இது சொகுசு கார் இல்லை என்று சொல்லாதே...வக்கீலை வைத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இரண்டு கார்களையும் வெளியில் எடு என்று அறிவுரை கூறியுள்ளார்.
 

More News

தோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் புளூடிக்: ஒருசில மணி நேரங்களில் நடந்தது என்ன?

தல தோனியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த புளூடிக் திடீரென நீக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் கொந்தளித்து இருந்ததால் சில மணி நேரங்களில் மீண்டும் டுவிட்டர் நிர்வாகம் அவருடைய

ராகவா லாரன்ஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் கோலிவுட் திரையுலகில் பிஸியான நட்சத்திரங்களில் ஒருவர் என்பதும் அவர் தற்போது 'ருத்ரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்

மிக்சிங் சரியில்ல… மது அருந்தியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

இங்கிலாந்து நாட்டில் நைட் கிளப்புக்கு சென்ற இளம்பெண் ஒருவர் மது அருந்தியபோது திடீரென கைக் கால்களை இழுத்துக்கொண்டு

சாதி பெயரால் அவதூறு செய்தவர்களுக்கு ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா பதிலடி!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் அர்ஜென்டினாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில்

தஞ்சை கோவிலில் முதன் முறையாக தமிழில் அர்ச்சனை.....!

தஞ்சை  பெருவுடையார் கோவிலில் இன்று முதன்முதலாக முறைப்படி  தமிழில் அர்ச்சனை நடைபெற்றது.