close
Choose your channels

ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்த படத்தின் டீசர் குறித்த தகவல்

Sunday, February 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்று கூறப்படும் ’பப்ஜி’ என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஆடையின்றி நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்து இருந்தார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசரை பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் வெளியிட உள்ளதாகவும் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த டீசரில் ஐஸ்வர்யாவின் நிர்வாண காட்சி இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அர்ஜுனன், ஐஸ்வர்யா தத்தா, சாந்தினி, அனிதா நாயர், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.