close
Choose your channels

'அராஜகம் பண்ணாதீங்க... கன்னத்தில் அறைந்த மனைவி குறித்து புகழ்: வீடியோ வைரல்

Friday, October 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது மனைவி கன்னத்தில் அறைந்த வீடியோவை பதிவு செய்து ’அராஜகம் பண்றாங்க’ என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த புகழ் தற்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பென்சியா என்ற பெண்ணை கடந்த மாதம் புகழ் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புகழ் - பென்சியா திருமணத்திற்கு விஜய் டிவியின் பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் மனைவியுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் புகழ், சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’நான் உங்களிடம் 950 ரூபாய் தான் கேட்டேன், ஆனால் நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்கள். அதனால் 50 ரூபாய் திருப்பிக் கொடுக்க என்னிடம் சேஞ்ச் இல்லை. என்னை 50 ரூபாய் கடன்காரர் ஆக்கிவிட்டீர்களே.. என்று கூறுகிறார். அதற்கு பென்சி ’ஆயிரம் ரூபாயும் நான் கடனாகத்தான் கொடுத்திருக்கின்றேன், 1000 ரூபாய் நீ திருப்பி தர வேண்டும் என்று கூறி கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக புகழ் பதிவு செய்தபோது, ‘வரவர அடி ஒரிஜினலாக விழுகுது. ஆக்டிங் பண்ணுங்க.. அராஜகம் பண்ணாதீங்க’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ரசிகர்களின் கமெண்ட்ஸ் ஆயிரக்கணக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.