'சூரரை போற்று' படத்தை முந்திய பொங்கல் ரிலீஸ் படம்! டிஆர்பியில் சாதனை!

  • IndiaGlitz, [Friday,January 22 2021]

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பானது. அதே நாளில் ஒளிபரப்பான மற்றொரு திரைப்படம் டிஆபியில் ’சூரரை போற்று’ படத்தை முந்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தீபாவளி நாளில் பல திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது சூரரைப்போற்று மற்றும் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’புலிகுத்தி பாண்டி’ ஆகிய இரண்டு படங்கள்தான். இந்த இரண்டு படங்களில் டிஆர்பியில் எந்த படம் முதலில் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள டிஆர்பி தகவலின்படி ’புலிக்குத்தி பாண்டி’ முதலிடத்தை பெற்றுள்ளது. ’சூரரை போற்று’ படத்திற்கு இரண்டாம் இடமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த டிஆர்பி விவரங்கள் ஆச்சரியத்தை அளித்து உள்ளன என்றாலும் சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படத்தை ஓடிடியில் ஏற்கனவே பெரும்பாலான ரசிகர்கள் பார்த்து விட்டார்கள் என்பதும் தற்போது பார்த்தவர்கள் பெரும்பாலும் இரண்டாம் முறை பார்த்தவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் மசாலா கலந்த அதிரடி ஆக்ஷன் படமான புலிக்குத்தி பாண்டி’ படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சீயில் வெளியானதால் தான் அந்த படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

More News

காதல் மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல இயக்குநர்… வைரலாகும் குடும்ப புகைப்படம்!!!

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவரது காதல் மனைவி நடிகை குஷ்பு மற்றும் மகள்களுடன் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்

5 நிமிடத்தில் எப்படி சாத்தியம்? 18 வயது இளைஞரை பார்த்து அசந்த பிக்பாஸ் சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் ரசிகர்களால் 'சுரேஷ் தாத்தா' என்று அன்புடன் அழைக்கப்பட்டார் என்பதும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிற்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது

ஜாலியாக ரோட் ட்ரிப் சென்ற ஷிவாங்கி: உடன் சென்றவர் யார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் உள்பட ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள ஷிவாங்கி தற்போது நடைபெற்று வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்  என்பதும்,

ரசிகரின் பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி: வைரல் வீடியோ!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் ஆதரவும் ரசிகர்களும் பெருகி வருகிறது என்பதும், அதுமட்டுமின்றி அவருக்கு புதிய திரைப்படங்களும் ஒப்பந்தமாகி கொண்டிருக்கின்றன