வேலை இழந்த பெண்ணுக்கு 1000க்கும் மேற்பட்ட வாய்ப்புகள்: எப்படி இந்த மேஜிக்

  • IndiaGlitz, [Friday,November 08 2019]

வீட்டு வேலையை இழந்த பெண் ஒருவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது. இந்த மேஜிக் ஒரே ஒரு விசிட்டிங் கார்டினால் வந்தது என்றால் நம்ப முடிகிறதா?

புனேவை சேர்ந்த கீதா கேல் என்ற பெண் ஒரு வீட்டில் வீட்டுவேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது வேலை போய்விட்டது. இதனால் பெரும் வருத்தத்தில் அவர் இருந்தபோது அவருக்கு மார்க்கெட்டிங்கில் பணிபுரியும் ஒரு பெண் ஆறுதல் கூறியதோடு அவருக்காக புதிய டிசைனில் வித்தியாசமாக ஒரு விசிட்டிங் கார்டை டிசைன் செய்து தந்துள்ளார்.

இந்த விசிட்டிங் கார்டில் என்னென்ன வேலைக்கு எவ்வளவு கட்டணம் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விசிட்டிங் கார்டை 10 பிரதிகள் எடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கீதே கேல் கொடுத்தார். இந்த விசிட்டிங் கார்டை பார்த்த ஒரு பெண், விசிட்டிங் கார்ட் வித்தியாசமாக இருப்பதை பார்த்து உடனே அவருடைய ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். அவ்வளவுதான் இந்த விசிட்டிங் கார்ட் பயங்கர வைரலாகி கீதே கேலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்பு குவிந்து கொண்டிருக்கின்றதாம். சுமார் ஆயிரம் பேர் அவரை வேலைக்கு கூப்பிடுவதாகவும் இதில் எந்த வேலையை தேர்வு செய்வது என்று அவர் திணறி வருவதாகவும் தகவல்.