close
Choose your channels

வொர்க் ஃப்ரம் ஹோமில் இவ்வளவு சின்சியரா? மணமேடையிலும் லேப்டாப்பில் வொர்க் செய்யும் மணமகள்

Sunday, July 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வொர்க் ஃபிரம் ஹோம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. வொர்க் ஃப்ரம் ஹோம் குறித்த பல மீம்ஸ்கள் மற்றும் அலப்பறைகள் குறித்து வீடியோக்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். வொர்க் ஃப்ரம் ஹோமில் வீடியோ காலில் மேலதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டில் உள்ள குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் வைரலாகி வந்தன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோமில் கடமையே கண்ணாக இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பஞ்சாபை சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமண மேடையில் மணமகனின் அருகில் உட்கார்ந்து இருக்கும் போதும் அவர் கையில் லேப்டாப் மற்றும் மொபைல் போனை வைத்துக்கொண்டு கடமை உணர்ச்சியுடன் வேலை செய்து கொண்டதும் அதை பரிதாபமாக அருகில் உட்கார்ந்து மணமகன் பார்த்து கொண்டதுமான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே ஒரு முறை வாழ்க்கையில் நடக்கும் திருமணத்தைக் கூட ரசித்து ருசிக்காமல் வொர்க் ஃப்ரம் ஹோமில் சின்சியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு சிலர் பாராட்டுக்கள் தெரிவித்தாலும், அந்த அப்பாவி மணமகனை இப்படி தவிக்க விட்டுவிட்டு லேப்டாப்பே கதி என்று இருக்கும் மணப்பெண்ணுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 13 விநாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.