சமந்தாவின் 'புஷ்பா' தமிழ்ப்பாடலை பாடிய பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பதும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பதும், இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பின் லிரிக் வீடியோ நேற்று மாலை வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த பாடலின் தமிழ் பதிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர். ’ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா’ என்ற இந்த பாடல் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் விவேகா பாடல் வரிகளில் உருவாகியுள்ளது. இந்த பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் சில வரிகள் இதோ:

சேலை சேலை சேலை கட்டினா குறுகுறுன்னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுனு போட்டா குறுக்க மறுக்க பாப்பாங்க
சேலை பிளவுசோ, சின்ன கவுனோ டிரஸ்ஸூ ஒன்னும் இல்லிங்க
ஆசை வந்தா சுத்தி சுத்தி அலையும் ஆம்பள புத்தி
ஓ சொல்றியா மாமா, ஓ ஓ சொல்றியா மாமா

More News

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ஸ்டைலிஷ் கெட்டப்: வைரலாகும் புகைப்படம்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து முடித்த ஜெயம் ரவி, விரைவில் இந்த படத்திற்காக டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளார் என்று செய்திகள் வெளியானது

2 வருஷம் ஆயிருச்சு: மனைவி, மகளுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்த சதீஷ்!

இரண்டு வருட இனிமையான நினைவுகள் என்ற கேப்ஷன் உடன் நடிகர் சதீஷ் பகிர்ந்து உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

விஜய், தனுஷ் தெலுங்கு சினிமாவில் நடிக்கலாமா? ஜூனியர் என்.டி.ஆர் கருத்து!

விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் முதல்முறையாக நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமாகி உள்ளது குறித்து ஜூனியர் என்டிஆர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

மாடலிங்க் துறையில் நுழைந்த சச்சின் மகள்… தீயாய் வைரலாகும் பிக்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் முடிசூடா மன்னனாக வாழ்ந்தவர்

வெள்ளாவி நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் இடம்பெற்ற “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?“