இவருக்கு டான்ஸ் தெரியுமா? வைரலாகும் ஒலிம்பிக் வீராங்கனையின் அரபிக்குத்து வீடியோ!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து தளபதி விஜய் நடிப்பில் உருவான “பீஸ்ட்“ திரைப்படத்தின் அரபிக்குத்துப் பாடலுக்கு கலக்கலான நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பி.வி.சிந்துவிற்கு நடனம் கூட ஆடத்தெரியுமா? என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். மேலும் 2016 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் மற்றும் 2020 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் என்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பி.வி.சிந்து, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் “பீஸ்ட்“ படத்தின் முதல் லிரிக்கல் பாடலான “ஹலமதி ஹபிபோ ஹலமதி ஹபிபோ“ எனும் பாடலுக்குத் தனது க்யூட்டான நடனத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிந்துவிற்கு நடனம் கூட ஆடத்தெரியுமா? என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு உள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் “பீஸ்ட்“ படத்தின் அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. ஆனாலும் முதல் ரிலிக்கல் பாடலான அரபிக்குத்துப் பாடல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலிசாகி இதுவரை யூடியூபில் 323 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேபோல இந்தியாவின் டாப் 50 பாடல் வரிசையிலும் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்தாரா? ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த கேஜிஎஃப் நடிகர்!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் “கேஜிஎஃப்2“ திரைப்படம் இந்த மாதம் 14 ஆம் தேதி ரிலீசானது. இந்தத் திரைப்படம்

'கே.ஜி.எஃப்' தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சுதா கொங்காரா: ஆரம்பமே மாஸ் தான்!

'சூரரைப்போற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து உள்ளது என்பதும் இந்த படத்தை 'கே.ஜி.எஃப்' மற்றும் 'கேஜிஎப் 2 ' படங்களை தயாரித்த

செம லவ் ஸ்டோரி: 'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனின் அடுத்த படம்!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும் 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தின் நாயகியுமான கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? 'ஆர்.ஆர்.ஆர்' வசூலை நெருங்கும் 'கேஜிஎஃப் 2'

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்'  திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் வசூலை 'கேஜிஎப் 2'  திரைப்படம்

1970களில் இருந்த அண்ணா சாலை: விஷால் படத்திற்காக போடப்படும் செட்!

கடந்த 1970களில் சென்னை அண்ணா சாலை இருந்த அமைப்பில் விஷால் படத்திற்காக செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.