close
Choose your channels

கமல்ஹாசனை அடுத்து ரஜினியை சந்தித்த விளையாட்டு வீராங்கனை!

Tuesday, December 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாறு சாதனையை நிகழ்த்திய இந்திய வீராங்கனை பி.வி சிந்துவுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் இல்லத்திற்கு சென்று பிவி சிந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ‘தலைவர் 168’ என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இதனையடுத்து அவர் தங்கியிருந்த ஐதராபாத் ஓட்டலுக்கு சென்ற பிவி சிந்து, ரஜினியை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.

ரஜினியுடன் பிவி சிந்து இருக்கும் புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.