'குவீனை' பட்டர்பிளையாக மாற்றிய கமல் நண்பர்

  • IndiaGlitz, [Monday,April 17 2017]

பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடித்த சூப்பர் ஹிட் படமான 'குவீன்' படம் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், தமிழில் கங்கனா நடித்த கேரக்டரில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்தி வெளிவந்தது.
தமிழில் 'குவீன்' ரீமேக் குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த படம் தற்போது கன்னடத்தில் தயாரிக்கவிருப்பது உறுதி செய்யபப்ட்டுள்ளது.
குவீன்' படத்தின் கன்னட ரீமேக் படத்திற்கு 'பட்டர்பிளை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் கங்கனா வேடத்தில் பரூல் யாதவ் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'ட்ரீம்ஸ்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தை கமல்ஹாசனின் நண்பரும், கமல்ஹாசன் நடித்த 'உத்தமவில்லன்' படத்தின் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரோபோ சங்கருடன் இணைகிறாரா சமந்தா?

நடிகர் விஷால் நடிக்கும் 'இரும்புத்திரை' படத்தில் சமந்தா முதன்முறையாக ஜோடி சேருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஓபிஎஸ் அணிக்கு தாவுகிறாரா சி.ஆர்.சரஸ்வதி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது முதல், அவர் மறைந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு வரை அடிக்கடி சமூக வலைத்தள பயனாளிகளிடம் சிக்கி சின்னாபின்னாமானவர்களில் ஒருவர் சி.ஆர்.சரஸ்வதி...

விக்ரமுடன் வேலை செய்யும்போது மன அழுத்தம் இல்லை. பிரபல இயக்குனர்

சீயான் விக்ரம் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் நேரிலும் தொலைபேசியிலும் இணையதளங்கள் மூலமும் வாழ்த்து கூறி வருகின்றனர்...

சரவணா ஸ்டோர் ஓனருடன் நயன்தாரா நடிப்பது உண்மையா?

கடந்த இரண்டு நாட்களாக மிமி கிரியேட்டர்களுக்கு கிடைத்த அல்வா போன்ற விஷயம் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளதாக வந்த செய்திதான். ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூகவலைத்தளங்கள், இணையதளங்களும் இந்த செய்தியை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இரட்டை இலை லஞ்ச விவகாரத்தில் தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெறுவதற்காக அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் ரூ.60 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு அட்வான்ஸாக ரூ.1.30 கோடி வரை பெற்றதாகவும் டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவர் இன்று காலை செய்யப்பட்டார்...