டி20 போட்டியில் டீ காக் செய்த செயல்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

நேற்று துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டியில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயின்டன் டீ காக் போட்டிக்கு முன்பு இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு சபதம் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் டீ காக் மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் கடந்த 17 ஆம் தேதிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் போட்டிகள் அனைத்திலும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அணிவீரர்கள் இனவெறிக்கு எதிரான சபதங்களை முழங்காலிட்டு எடுத்துக் கொள்கின்றனர். BlackLiveMatter எனும் பெயரில் கடைப்பிடிக்கப்படும் இந்தச் செயலுக்கு உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் இனவெறிக்கு எதிரான முழக்கமிடும் நிகழ்வில் அமைதி காத்துவந்தார். இதனால் இனவெறிக்கு எதிரான விழிப்புணர்வில் அவருக்கு உடன்பாடில்லை என்பது போலவே புரிந்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடுகளை இவர் மீறிவிட்டதாகவும் அதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரையில் முக்கிய வீரராகக் கருதப்படும் டீ காக் நேற்றைய போட்டியில் திடீரென பிளேயிங் 11-இல் இடம்பெறவில்லை. இதையடுத்து விக்கெட் கீப்பராக கிளாசன் கடைசி நேரத்தில் களம் இறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனிப்பட்ட காரணங்களுக்காக டீ காக் இனவெறிக்கு எதிரான முழக்கத்தைச் செய்யவில்லை எனக் கூறியிருக்கிறது. ஆனால் தென்ஆப்பிரிக்க அணியில் தொடர்ந்து இனவெறி காட்டப்படுவதாக விமர்சனமும் வைக்கப்படுகிறது. கறுப்பினத்தவர்களுக்கு இந்த அணியில் அதிகம் முக்கியத்துவம் கொடக்கப்படுவதே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.

More News

மச்சான் என்று பாக். வீரரை சொந்தம் கொண்டாடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ!

ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில்

கன்பஃக்சன் ரூமுக்கு அழைக்கப்பட்ட இசைவாணி: இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கோ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு நகரத்தார்கள் மற்றும் கிராமவாசிகள் என 2 பிரிவாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில்

தமிழக முதல்வரை சந்தித்த செளந்தர்யா ரஜினிகாந்த்: என்ன காரணம்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சற்று முன் சந்தித்த தகவல்கள் வெளியாகியுள்ளது 

வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர்கள்: வைரலாகும் குரூப் புகைப்படம்!

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 169 பேர் போட்டுயிட்டார்கள் என்பதும் அதில் 129 பேர் வெற்றிப் பெற்றார்கள் என்ற செய்திகளை ஏற்கனவே

மீண்டும் ஒரு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்: கமல்ஹாசனும் போடுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹைலைட்களில் ஒன்று கமல்ஹாசன் போடும் குறும்படங்கள் தான் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் சீசனில் இருந்து அவர் பதிவு செய்யும் குறும்படங்கள் மிகப்பெரிய