close
Choose your channels

கொயட் பண்ணுடா: 'மாஸ்டர்' படம் குறித்த அனிருத்தின் அதிரடி அறிவிப்பு!

Friday, October 16, 2020 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள் தமிழகத்தில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அனேகமாக வரும் பொங்கல் தினத்தில் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகலாம் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் ’மாஸ்டர்’ படம் குறித்த அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்தில் இடம்பெற்ற ’கொயட் பண்ணுடா’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தளபதி விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உலகமெங்கும் சக்கை போடு போட்டு வருகின்றன என்ற நிலையில் இன்று வெளியாகவிருக்கும் கொயட் பண்ணுடா பாடல் இன்றைய சமூகவலைதள ட்ரெண்டிங்கில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz