“நாங்கள் இந்தியர்கள் அதுதான் எங்கள் மதம்” – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கருத்து


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இந்திய மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத் தளங்களின் மூலம் பகிர்ந்து கொண்டனர். இத்தகைய வாழ்த்து செய்திகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், நாட்டுப் பற்றினை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தன. பலரது குடியரசு தின வாழ்த்து செய்திகளுக்கு மத்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் “மதம்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவினைப் பதிவிட்டு இருந்தார். அதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் பிளஸ் 5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசியது காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அந்த வீடியோவில், ”எனது மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், ஆனால் எனது குழந்தைகள் இந்தியர்கள்” என்று கூறி இருக்கிறார். மேலும், “என் மகள் குழந்தையாக இருக்கும் போது, அப்பா நாம் என்ன மதம்? என்று கேட்ட கேள்விக்கு “நாம் இந்தியர்கள்” என்று ஷாருக்கான் பதில் அளித்தது பற்றிய செய்திகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
மதம் குறித்து ஷாருக்கான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. மதங்களைக் கடந்து இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு கொண்டு ஷாருக்கான் பேசிய கருத்துகளுக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சில முரண் பட்ட கருத்துக்களும் சமூக வலைத் தளங்களில் பகிரப் பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.