வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் சந்தானம்!

  • IndiaGlitz, [Wednesday,May 01 2019]

நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் 'A1' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜான்சன் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் 'ஜெயம்கொண்டான்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சமீபத்தில் 'பூமராங்' என்ற வெற்றிப்படம் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்கவுள்ளார். ஆர்.கண்ணன் மற்றும் எம்.கே.ராம்பிரசாத் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த தகவலுடன் கூடிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது