வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் சந்தானம்!

  • IndiaGlitz, [Wednesday,May 01 2019]

நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் 'A1' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜான்சன் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் 'ஜெயம்கொண்டான்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சமீபத்தில் 'பூமராங்' என்ற வெற்றிப்படம் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்கவுள்ளார். ஆர்.கண்ணன் மற்றும் எம்.கே.ராம்பிரசாத் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த தகவலுடன் கூடிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 

More News

ஃபனி புயலால் சென்னைக்கு ஏற்பட்ட பிரச்சனை: தமிழ்நாடு வெதர்மேன்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாகவும் ஃபனி புயலாகவும் மாறிய நிலையில் இந்த புயல் தற்போது வங்கதேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது

மீண்டும் போலீஸ் கேரக்டரில் ஜோதிகா!

நடிகை ஜோதிகா நடிப்பில்  சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்

சாமியார் ஆசாராம் பாபுவை அடுத்து அவரது மகனுக்கும் ஆயுள் தண்டனை!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மற்றும் மகன் நாராயணன் சாய் ஆகியோர்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு

அதிரடி ஆட்டத்துடன் விடை பெற்ற வார்னர்: இனி என்ன ஆகும் சன்ரைசர்ஸ்?

நேற்று பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 56 பந்துகளில் 81 ரன்கள் அதிரடியாக அடித்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர்.

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியின் முதல் அதிரடி உத்தரவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே நிர்வாகிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது.