ஆர்.கண்ணனின் 'தள்ளி போகாதே: சென்சார் தகவல்: 

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

’ஜெயம் கொண்டான்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கண்ணன் அதன்பின் ’கண்டேன் காதலை’ ’சேட்டை’ ’இவன் தந்திரன்’ ’பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தற்போது அவர் ’தள்ளிப்போகாதே’ மற்றும் ’எரியும் கண்ணாடி’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’தள்ளிப்போகாதே’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? அல்லது ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

18-க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்...! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தமிழகத்தில் 18 வயதிற்கும் அதிகமானோருக்கு, கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க இருப்பதாக தமிழக அரசு சார்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் முழு ஊரடங்கு...! கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்...!

கர்நாடகாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகளில் செல்வதற்கு ஆயிரக்கணக்கில் விலை அதிகரித்துள்ளது.

இந்தியா முழுக்க 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கா? சென்னை, கோவைக்கும் வாய்ப்பா?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது பீதியை கிளப்பி வருகிறது.

ஓடிடியில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 திரைப்படங்கள்: பணிகள் மும்முரம்!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு 'உனரு' என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர்

மறைந்த நடிகர் விவேக்கிற்கு மத்திய அரசு செய்ய போகும் மரியாதை!

பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற தகவல் தமிழ் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது