close
Choose your channels

ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'காசே தான் கடவுளடா' படக்குழு..!

Sunday, March 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிய ‘காசே தான் கடவுளடா’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் பல்வேறு தடைகளுக்கு பின் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘காசே தான் கடவுளடா’ திரைப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய கூடாது என அந்த படத்திற்காக கடன் கொடுத்த ஒருவர் வழக்கு தொடர்ந்து நிலையில் பணத்தை திருப்பி கொடுக்காமல் ‘காசே தான் கடவுளடா’ படத்தை வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த படத்திற்கான அனைத்து பிரச்சனைகளும் தற்போது முடிவடைந்ததை அடுத்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘காசே தான் கடவுளடா’ திரைப்படம் மார்ச் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1972 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோ நடித்த ‘காசே தான் கடவுளடா’ படத்தின் ரீமேக் படம் தான் இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், ஷிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ் பிரதீப் இசையில் பிரசன்னா குமார் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.