close
Choose your channels

எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரபல தமிழ் நடிகை!

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான சந்தோஷ் நாராயணனின் எஞ்சாய் எஞ்சாமி என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெருக்குறள் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடிய இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே 

மேலும் இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷிகண்ணா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அவரது நடன பயிற்சியாளரும் இதே பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் நடிகை காஜல்அகர்வால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷிகண்ணா தற்போது விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’,’ சுந்தர் சியின் ‘அரண்மனை 3 உள்பட ஒருசில படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.