close
Choose your channels

'ராட்சசன்' இயக்குனரின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோவா?

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த 'ராட்சசன்’ என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், ஹிந்தியிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் கடந்த 4 ஆண்டுகளாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காத நிலையில் தற்போது புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ராட்சசன்’ ராம்குமார் இயக்க இருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க ஒரு லவ் ஸ்டோரி என்றும் இந்த படத்திலும் 'ராட்சசன்’ நாயகன் விஷ்ணு விஷால் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த விஷ்ணுவிஷால் - ராம்குமார் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதை அடுத்து இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.