என்ன ஒரு ஹீரோ, என்ன ஒரு ஸ்டைல்: விஜய் குறித்து அஜித்துக்கு நெருக்கமான வீராங்கனை

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

இந்தியாவின் மோட்டார் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துலா நடிகர் அஜித்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதும் அஜித்தும் அலிஷாவின் தந்தையும் ஒரே மோட்டார் சைக்கிள் ரேஸில் பங்கு கொண்டனர் என்பதும் தெரிந்ததே. இதனால் அஜித் குறித்து அவ்வப்போது அலிஷா பெருமையாக கூறுவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அஜித்தை அடுத்து அவர் விஜய் குறித்தும் ஒரு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் ’கில்லி’ படம் குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார்.

இதனை பார்த்து அலிஷா அப்துல்லா, ‘விஜய்! ..என்ன ஒரு ஹீரோ! என ஒரு ஸ்டைல்! என்று குறிப்பிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துக்கு நெருக்கமான அலிஷா அப்துல்லா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

More News

ரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் ரிலீஸ் ஆகி 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று முதல் ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவரின் 45 ஆண்டு திரையுலக பயணத்தை

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள்: உச்சநீதிமன்றத்தில் UGC தெரிவித்த இறுதிமுடிவு!!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் நடத்தப் படவில்லை

மும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!!! அச்சமூட்டும் கடத்தல் பின்னணி!!!

நவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.

அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ! 

நடிகரும் திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கருணாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

கொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம்!!! சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு!!! தமிழக அரசின் அதிரடி!!!

கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்து உள்ளது