ரச்சிதா மகாலட்சுமியின் முதல் முயற்சி.. பாலாஜி முருகதாசுக்காகவா? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி முதல் முறையாக ஒரு முயற்சி செய்து உள்ள வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சின்னத்திரை உலகில் பல சீரியல்களில் ரட்சிதா மகாலட்சுமி நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’பிரிவோம் சந்திப்போம்’ ’சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சீரியல்களிலும் ’உப்புக்கருவாடு’ ‘மெய்நிகரே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்தது

மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு வலிமையான போட்டியாளராக ரச்சிதா மகாலட்சுமி இருந்தார் என்பதும் கடைசி நேரத்தில் தான் அதாவது 91 வது நாளில் தான் அவர் எவிக்சன் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக அவருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் அவற்றில் ஒரு திரைப்படம் ’ஃபயர்’/ இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ளார்

இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டருக்காக முதல் முதலாக சொந்த குரலில் டப்பிங் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் டப்பிங் செய்த வீடியோவையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதல் முறையாக சொந்த குரலில் டப்பிங் செய்துள்ள ரச்சிதா மகாலட்சுமிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரமின் 'சியான் 62' படத்தின் டைட்டில் இதுதான்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சியான் 62' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ராம நவமி அதிசயம்: அயோத்தியில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி!

ராம நவமி தினத்தன்று அயோத்தியில் அற்புதமான நிகழ்வு ஒன்று நடந்தது. புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில், பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி நேரடியாக விழுந்தது.

ஸ்ரீ ராம நவமி: ராமரின் 16 குணங்கள், அவதாரங்கள், பாலம் கட்டிய கதை! - திருமதி. U.E.சிந்துஜா

இந்த ஸ்ரீ ராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! ஏனெனில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு நடக்கும் முதல் ராம நவமி இது

அல்சைமர்ஸ் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வது எப்படி ?

அல்சைமர்ஸ் நோய் என்பது மூளை நரம்பியல் பிரச்சினை ஆகும்.இதில் மூளையில் உள்ள செல்கள் இறப்பதால் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படுகிறது...

தேர்தலில் போட்டியிடும் பிரபல தமிழ் நடிகருக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி வந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில்