'ராதா'வை தூக்க சொன்ன விஷாலுக்கு ராதாரவி பதிலடி!

  • IndiaGlitz, [Thursday,March 28 2019]

சமீபத்தில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்தது. அந்த வகையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் 'ராதா' என்ற பெண் பெயரை தனது பெயருக்கு முன்னாள் வைத்து கொண்டு ராதாரவி பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசுவது பொருத்தமில்லாதது. எனவே அவர் தனது பெயருக்கு முன் உள்ள ராதாவை நீக்கிவிடலாம் என்று தெரிவித்திருந்தார்

விஷாலின் இந்த கருத்துக்கு ஊடகம் ஒன்றின் பேட்டியில் பதிலளித்த ராதாரவி, 'ராதா' என்பது என்னுடைய அப்பாவின் பெயர். என்னுடைய அப்பாவின் பெயரைத்தான் நான் என் பெயருக்கு முன்னாள் வைத்துள்ளேன். விஷாலுக்க்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு ஆர்கே நகரில் போட்டியிடவே தெரியாதபோது இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்' என்று கூறியுள்ளார்.

ராதாரவின் தந்தை எம்.ஆர்.ராதா என்பதும், அவர் எம்ஜிஆர், சிவாஜி காலத்து புகழ் பெற்ற நடிகர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
 

More News

ராகுல்காந்தியை சந்தித்த பிரபல நடிகர்! காங்கிரஸில் இணைய திட்டம்

.பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான சத்ருஹன்சின்ஹா, கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சனம்  செய்து வந்தார்

'தளபதி 63' படத்தில் ஷாருக்கான் நடிப்பது உண்மையா? படக்குழுவினர் விளக்கம்

விஜய் நடிப்பில் உருவாகி இவரும் 'தளபதி 63' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கெள்ரவ சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக நேற்று வெளியான செய்திக்கு படக்குழு இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட பிரபலம் திடீர் வாபஸ்!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும் பாஜக வேட்பாளராக தமிழிசையும் போட்டியிடுகின்றனர்.

கோவை சிறுமி கொலை விவகாரம்: தகவல் தெரிவித்தால் சன்மானம்

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன்பின் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்

தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகும் யோகிபாபு படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கதாநாயகனாகவும் அவர் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.