close
Choose your channels

கமல்ஹாசனை தாக்கி, நயன்தாராவுக்கு நன்றி கூறிய ராதாரவி!

Saturday, May 25, 2019 • தமிழ் Comments

ஜீவா நடித்த 'கொரில்லா' படத்தின் இசைவெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசியபோது கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கியும், நயன்தாராவுக்கு மறைமுகமாக நன்றியையும் கூறினார்.

'கூட்டம் கூடி மக்கள் கைத்தட்டினாலே போதும் ஜெயித்து பதவிக்கு வந்துவிடலாம் என்று ஒருசிலர் நினைத்து கட்சி ஆரம்பித்த்னர். ஆனால் அது உண்மையில்லை என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. எனவே இனிமேல் கூட்டம் கூடுவதை வைத்து யாரும் தனிக்கட்சி தொடங்கக்கூடாது என்பதை புரிந்து கொள்வார்கள். அது புரிந்ததால்தான் நானும் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை' என்று கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கினார்.

மேலும் ஒரு பொதுஜனமாக முதல்முறையாக தேர்தலை நான் ஒதுங்கியிருந்து பார்த்தது இந்த தேர்தல்தான். இந்த வாய்ப்பை தந்தவருக்கு எனது நன்றி என நயன்தாராவுக்கு மறைமுகமாக நன்றி கூறினார் ராதரவி.
 

Get Breaking News Alerts From IndiaGlitz