உதயநிதியின் 'வசதியான வயதானவர்' டுவீட்டுக்கு ராதாரவியின் பதில்!

  • IndiaGlitz, [Sunday,December 22 2019]

திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் என்று குறிப்பிட்டிருந்தார். வயதான பெரியவர்கள் என்று உதயநிதி, ரஜினியைத்தான் கூறுவதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உதயநிதியின் இந்த டுவீட் குறித்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி கூறியபோது, ‘ஸ்டாலின், ரஜினி, கமல், விஜயகாந்த் அனைவருமே ஒரே வயது உடையவர்கள் என்பதால், மு.க.ஸ்டாலினையே உதயநிதி சொல்கிறார் என்று தெரிவித்தார்.

மேலும் திமுக பேரணியில் கமல் கலந்து கொள்ளாதது குறித்து கூறியபோது, ‘இரண்டாவது வரிசையில் அமர வைத்துவிடுவோம் என்ற ஐயத்தாலேயே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருக்கலாம் என்றும் ராதாரவி கூறினார்.

More News

என் பேச்சிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சம்மந்தமில்லை: ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதில் இருந்து அவர் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

ரஜினியின் கருத்து எனக்கு சுத்தமாக புரியவில்லை: ரஜினி நண்பரின் மகன் பேட்டி!

குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்த ரஜினியின் கருத்து தெளிவாக இல்லை என்றும் தனக்கு சுத்தமாக புரியவில்லை என்றும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ப சிதம்பரம்

அமீரின் 'நாற்காலி'யில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

'மௌனம் பேசியதே, ராம், மற்றும் 'பருத்தி வீரன்' உட்பட ஒரு சில படங்களை இயக்கிவரும் ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான இயக்குனர் அமீர்

திமுக பேரணியில் விஜய் பங்கேற்பாரா? எஸ்.ஏ.சி பதில்

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாளை பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்த உள்ளது.

இந்தியா-சீனா, எது உண்மையான குடியரசு நாடு: நக்மாவின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்

குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.