தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும்: பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

நாடு முழுவதும் செல்வாக்குள்ள கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் மட்டும் பின்தங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தும் அந்தக் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை இருப்பினும் வருங்காலத்தில் பாஜகவிற்கு தமிழகத்தில் நல்ல எதிர்காலம் இருப்பதாக பாஜக தமிழகத் தலைவர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி பாஜகவில் சமீபகாலமாக பல திரையுலக பிரமுகர்களும் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பாஜகவின் தமிழகத்தில் பாஜகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து ராதாரவி கூறிய போது ’தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என்றும் இன்னும் 25 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் பாஜக தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

ராதாரவி கூறியபடி பாஜக தமிழகத்தில் வளருமா? வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பாஜக பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

வருமான வரி அதிகாரிகள் மீது விஜய் வழக்கு போடட்டும்: பாஜக பிரமுகர் கருத்து

'பிகில்' படத்தின் வசூல் குறித்த வெளியான மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அடுத்து வருமான வரித்துறையினர் அந்த படத்தின் தயாரிப்பாளர்,

விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க அவருக்கு நல்லதுதான்: பட்டிமன்ற பிரபலம்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்து எந்தவொரு ஆவணமும் சிக்கவில்லை என்று தகவல் அளித்துள்ள நிலையில்

திருமணத்தின் மீதான நம்பிக்கையே உங்களால் தான் வந்தது: சாந்தனு வாழ்த்து

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் தன்னுடன் 'டார்லிங் டார்லிங் டார்லிங்' என்ற படத்தில் நடித்த நடிகை பூர்ணிமாவை கடந்த 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

CAA க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஐந்தாவது மாநிலம்..!

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை இந்த ஆண்டு அவர் நடித்த 'டகால்டி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று