'ராதே ஷ்யாம்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த படக்குழுவினர்!

  • IndiaGlitz, [Saturday,November 13 2021]

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று ’ராதே ஷ்யாம்’ என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் தமிழ் பகுதிக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த நிலையில் இந்த பாடலை எதிர்பார்த்து இசை ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் ஜோடியாக ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார் என்பதும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது என்பதும் இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதர்வாவின் 'தள்ளிப் போகாதே' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா நடித்த 'தள்ளிப் போகாதே' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

12 விருதுகளுக்கு நாமினேட் ஆன சமந்தா படம்: குவியும் வாழ்த்துக்கள்

சமந்தா நடித்த வெப்தொடர் ஒன்று 12 பிலிம்பேர் விருதுக்கு நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவை போற்றுகிறேன். ஞானவேலை வாழ்த்துகிறேன்: ஜெய்பீம் படத்தை பாராட்டிய பிரபல நடிகர்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை பாராட்டி முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் அறிக்கைகளை வெளியிட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த வாரம் எலிமினேட் ஆவது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நாமினேஷனில் சிக்கியவர்களில் குறைந்த வாக்குக பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதும் அந்த வகையில்